பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீப்பரவல், தற்போது இஹலகலகம பகுதிவரை வியாபித்துள்ளது.
இதன்காரணமாக, ஆயிரம் ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினர், காவல்துறையினர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
