இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
ஹராரேவில் இடம்பெற்றுவரும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்தநிலையில் சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.