தற்போது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப்போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் அவுஸ்திரேலிய – ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.