மொரகொல்லாகம பகுதியிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு-மட்டக்களப்பு ரயிலில் மோதி ஒரு பெரிய முதலை ஒன்று காயமடைந்துள்ளது.
இதன்படி ஹெரத்கம வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகள், ரயிலில் மோதிய பெரிய முதலையை சிகிச்சைக்காக நிகவெரட்டிய கால்நடை பிரிவுக்கு இன்று (06) கொண்டு சென்றுள்ளனர்.
