மட்டக்களப்பு, போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் நேற்று முன்திம் (11) மாலை மின்சாரக் கம்பியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான தங்கராசா சுந்தரராசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மின்சார தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்.
மின்சாரம் தாக்கியவுடன் குறித்த முதியவரை பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரந்துள்ளார்.
சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
