ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ எனப்படும் ‘பனா மந்திரி’ கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 5 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
