இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குருவிட்ட சிறைச்சாலையின் 13 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இதனை உறுபடுத்தியுள்ளார்.
இந்த சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படையினரும், கலகதத்டுப்பு பிரிவினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் எவ்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.


