இலங்கையில் இதுவரை நடந்திராத ஒரு புதிய விடயமொன்று நடைபெறவுள்ளது. முதல் முறையாக 4 பெண்கள் பிரதி காவல்துறை மாஅதிபராக நியமிக்கப்படவுள்ளனர்.
அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனங்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜெயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோரே புதிய பிரதி காவல்துறை மாஅதிபர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
