யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் (28) இன்றைய தினமும் (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 பேர் போதை மாத்திரைகளுடனும், 2 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான நபர்களில் ஒருவர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.