இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்
பேட்டியொன்றில் தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன்.
நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதை செய்யுங்கள். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் – இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை.
இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன்.
நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள்.அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள்.
நான் எவருக்கும் எதிரானவன் அல்ல மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம். என அவர் தெரிவித்தார்