யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .
இந்நிலையில்,தாதிய பதிபாலர்களுக்கான ஐந்து வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் இரண்டு நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று வேறு வைத்தியசாலைகளுக்கு செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது
யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை
வரவேற்கும் நிகழ்வானது இன்றைய தினம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.