உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உக்ரைன் பிரதிநிதிகளுக்கு முழு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் அளிக்க முன்வருவதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு நிலம், கடல் மற்றும் வான்வழியில் ஒரு சர்வதேச படையின் மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க 26 நாடுகள் உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரான் கூறிய நிலையில், தற்போது புட்டினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
