போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு கனேடியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்த்துக்கீசிய காவல்துறை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில், 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலைப்பகுதியில் இயங்கும் இந்தச் சிறப்பு ரயிலில் (funicular) பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களையும் போர்த்துக்கீசிய காவல்துறை வெளியிட்டுள்ளது.
