ஓண்டாரியோ, வான் நகரில் தன் குழந்தைகளின் கண்முன்
சுட்டுக்கொல்லப்பட்ட அலீம் ஃபாரூக்!
ஓண்டாரியோ, வான் (Vaughan) நகரில் அப்துல் அலீம் ஃபாரூக்கி என்ற தந்தை, தனது குழந்தைகளின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், அவருடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தா
க்குதல் என்று யோர்க் பிராந்திய காவல்துறை கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில், அண்ட்ரீட்டா டிரைவ் (Andreeta Drive) மற்றும் பரோன்ஸ் தெரு (Barons Street) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தாக்குதல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காயங்களுடன் இருந்த ஒரு நபரை கண்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள், கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
