டொராண்டோவில் உள்ள வெஸ்டன் வீதிப் (Weston Road) பகுதியில், கழிவுநீர் பாரவூர்தி ஒன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது.
இந்த பாரவூர்தி, கழிவுகளை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமெனக் கூறப்படுகின்றது.
ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த பாரவூர்தி, கட்டிடத்தின் கீழேயிருந்த வாகனத் தரிப்பிடத்திற்குள் சரிந்தது.
டொராண்டோ தீயணைப்புப்படையின் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த கழிவுநீர் பாரவூர்தி வெற்றிகரமாகப் பள்ளத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்த விபத்தில் பாரவூர்தி ஓட்டுநர் உட்பட எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
