சீனா இந்திய இடையே கொரோனா பெருந்தொற்று மற்றும் எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுத்தப்பட்டிருந்த விமானசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


