செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற .இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவில்
செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும்
இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பலபகுதிகளிலும் இன்றைய தினம் இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
