ஒட்டாவாவுக்கும் மேற்கு மாகாணங்களுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட அதிருப்தி நிலைகளைச் சரிசெய்யுமாறு, கனடாவின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அல்பேட்டா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்களுடனான உறவில் ஒரு &புதிய அரசியல் ஆரம்பம்& தேவை என்று, மேற்கு மாகாணத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாகாணங்களில், கனேடிய மத்திய அரசின் முடிவுகள் குறித்து நீண்டகால அதிருப்தி நிலவுகிறது.
அல்பேட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், பிரதமர் மார்க் கார்னிக்கு வாழ்த்து தெரிவித்தாலும், &தற்போதைய நிலை தொடர அனுமதிக்க மாட்டேன்& என்றும், குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர் எதிர்பார்ப்பதாகவும் திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளார். சஸ்காச்சுவான் முதல்வர் ஸ்காட் மோ, கனேடிய மத்திய அரசு தனது மாகாணத்துடன் &ஈடுபாட்டுடன், ஆலோசனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, அல்பேட்டாவை ஒரு புதிய கனேடிய வல்லரசின் மையமாக நிலைநிறுத்துவது தொடர்பாக கார்னி தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சேவை வழங்குநர்களைச் சார்ந்திருப்பதை குறைக்கும்
வகையில் தனது அரசாங்கம் எரிசக்தி பாதுகாப்பு திட்டங்களை விரைவுபடுத்தும் என மார்க் கார்னி, கடந்த மாதம் கல்கரியில் நடந்த தேர்தல் பேரணியில் கூறினார்.
இந்த இலக்கினை அடையும் பொருட்டு, தனது அரசாங்கம் முதர்குடி மக்கள், மாகாணங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படும் என்றும் கார்னி அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.
