Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு.

ஜனவரி 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகளாவிய ரீதியில் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த ஒரு தேர்தலாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் தொடர்பாக பல விவாதங்களும் நடாத்தப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கவுள்ள நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களை பீப்பிள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன.

வொஷிங்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

“நாங்கள் முன்கூட்டியே சர்வாதிகாரத்திற்கு கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம்” என்று பீப்பிள்ஸ் மார்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரம்ப்பை எதிர்க்கும் வகையிலான போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் போரட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த போராட்டமானது நியூயோர்க், சியாட்டில் மற்றும் சிக்காக்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

நாளை டிரம்ப் பதவியேற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்றதொரு போராட்டத்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம் சம்பியன்.
அடுத்த செய்தி கிழக்கு மாகாண பாடசாலைக்கு நாளை விடுமுறை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

ஏப்ரல் 2, 2024
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் குளிர்காலத்திற்கான அவசரகாலத் திட்டம் அறிவிப்பு!

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் பாரிய காட்டுத் தீ – 110 பேர் காயம்!

ஜூலை 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?