அமெரிக்கா ஈரானின் 07 அதிவேக படகுகளையும் ஹொர்மூஸ் நீரிணையில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவானது புரொஜெக்ட் ஃப்ரீடம் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் 2000 கப்பல்களும், 20,000 மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காகவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புரொஜெக்ட் ஃப்ரீடம் திட்டத்தில் யாராவது இடையூறு விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்க்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
