இந்தோனேசியா அதிகளவு எரிமலையினால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகும். அந்த வகையில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் பாரிய உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த எரிமலை வெடித்து சிதறியதால் 9 பேர் உயிரிழந்ததுடன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி – லாகி எரிமலை என்ற எரிமலையே இவ்வாறு நேற்றைய தினம் வெடித்து சிதறியுள்ளதுடன் கரும்புகை வெளியேறி அப்பகுதியை மாசாக்கியுள்ளது.