GSP+ வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்றையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
இக்குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த மீளாய்வு நடத்தப்படும்
இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் இலங்கையின் அரச அதிகாரிகள், நிறுவனங்கள், அரசியல் தரப்பினர், சிவில் சமூக குழுக்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வணிகச் சங்கங்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.