Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஜனவரி 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் மற்றும் பிரதம செயலர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

விவசாயிகள் நெல் அறுவடை காலத்தில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்கள் வான்பாய்வதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்துக்கான நீர்வரத்து அதிகமாக உள்ளபோதும் குறைந்தளவான நீரே திறந்துவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மாவட்டத்தின் சில பகுதிகளில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்திலும் சில வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன எனவும் கலந்துரையாடலின்போது மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சிறிய நீர்பாசனக் குளங்கள் இரண்டு உடைப்பெடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களில் 47 குளங்கள் தற்போது வான்பாய்ந்து கொண்டிருப்பதாக மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.

தற்போதைய நிலையில் மழை வீழ்ச்சி குறைந்து வருவதாகவும் குளங்களுக்கான நீர் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கு அமைவாக இன்று மாலையிலிருந்து படிப்படியாக வான்கதவுகள் மூடப்படும் என்றும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நெல்லை அறுவடை செய்யக் கூடிய விவசாயிகள் அதனை அறுவடை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதன் ஊடாக அழிவுகளைக் குறைக்க முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் இணையவழியில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகள் தொடர்பான மீளாய்வு.
அடுத்த செய்தி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழப்பு!

நவம்பர் 7, 2025
இலங்கை

யாழில். வெளிநாட்டில் இருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு.

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?