கியூபெக் மாகாணத்தில் நடந்த மூன்று சாலை விபத்துகளில் ஆறுபேர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள், தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் நடந்த மூன்று தனித்தனியான சாலை விபத்துகளில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
சனிக்கிழமை மாலை, கியூபெக்கின் ”சோடியேர்-அபலகேஸ்” பகுதியில் உள்ள Saint-Luc-de-Bellechasse என்னும் ஊரில் நடந்த ஒரு சாலை விபத்தில், 29 வயது இளைஞர் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
Sainte-Sabine Road எனும் சுருங்கிய மற்றும் மண்ணுசரிவுடைய சாலையில் கார் வழித்தவறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சனிக்கிழமை மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன.
முதல் விபத்து காசபஸுவா (Kazabazua) அருகே Highway 105-இல் நிகழ்ந்தது.
இரண்டாவது விபத்து, கியூபெக் நகரில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்தில் உள்ள Sainte-Flavie பகுதியில் Highway 132-இல் நிகழ்ந்தது.
இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதிவரை, கியூபெக் மாகாண காவல்துறையின் பொறுப்பிலுள்ள சாலைகளில் மட்டும் 20 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
