கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் மொன்றியல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் துஷ்பியோகங்களை காணொளியாக பதிவு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வரலாற்று ரீதியான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறு குறித்த நபர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த 25 வருட கால தண்டனை முடிந்த பிறகும் பத்து ஆண்டுகள் குறித்த நபர் தீவிர கண்காணிப்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு 30 வயதான சமுவெல் மொடிரி என்ற நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்த சந்தேக நபர் 13 பெண்களுக்கு மேல் துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சுமார் 24 பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதனை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.