நைஜீரியாவில் 35 பணயக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார்ச் மாதம் குற்றவாளிக் குழுக்கள், சுமார் 56 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பணயக்கைதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 655 டொலர் அளவிலான பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் இதையடுத்து, அவர்கள் கேட்ட பணம் முழுவதும், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 56 பணயக் கைதிகளில் 35 பணயக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
