லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள் – TGTE ஏற்பாட்டில் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஏற்பாட்டில், தமிழீழ தேசியக் கொடி நாள் நேற்று லண்டன் மாநகரின் Trafalgar Square பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தமிழர் தேசிய வரலாறும் தியாகங்களும் நினைவுகூரப்பட்டன.
நேற்றைய இந்த நிகழ்வில் இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, தமிழர் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
