காஸாவில் சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டின் எனபவர் காஸாவில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டால் தனது கமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது கமராவையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவானது,
நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ், ஏபிசி நியூஸ் என சர்வதேச ஊடகங்கள் பலவற்றுக்கு பணியாற்றியுள்ள முகம்மது இவ்வாறு பதிவிட்டுள்ளது பலரால் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
