காசா மீது இன்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை காசாவில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படும் குழந்தைகளில் பத்தில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் பாலஸ்தீனப் பிரதேசங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதையும் எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்க 30 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் சந்தித்துப் பேசவுள்ளனர்
