கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தொழில்முனைவோர் குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த வாரம் மாகாண நியமனங்களுக்கான (Provincial Nomination) அதிக அழைப்புகளை (Invitations to Apply – ITAs) வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தொழில்முனைவோரை இலக்காகக் கொண்ட ஐந்தாவது தேர்வுச் சுற்று இதுவாகும்.
இது வணிகத் திறமைகளை ஈர்ப்பதில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள வணிகத்தை வாங்கி இயக்க விரும்பும் வெளிநாட்டு தொழில்முனைவோர் EI அடிப்படை வழி அல்லது EI பிராந்திய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதேவேளை, இந்த இரண்டு வழிகளூடாக இயங்கக்கூடிய வணிகங்கள் கனடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு முழுநேர வேலை வாய்ப்பையாவது உருவாக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
