அல்பர்ட்டா மாகாண அரசும், 22,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அறிவியல் சங்கம் (HSAA) என்ற தொழிற்சங்கமும் ஒரு புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
கடந்த 16 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த செயல்முறைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஊழியர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் 12% ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்குமாறு அந்த தொழிற்சங்கமும் தனது உறுப்பினர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
தாம் எதிர்பார்த்த அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்றாலும், தங்கள் உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகளான அதிக ஊதியம் மற்றும் மேம்பட்ட சலுகைகள் இதில் இடம் பெற்றுள்ளன என, தொழிற்சங்கத் தலைவர் மைக் பார்க்கர், தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பல மாத கால கடுமையான உழைப்பின் விளைவு என்று, அல்பர்ட்டா மாகாண நிதியமைச்சர் நேட் ஹார்னர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
