முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் 26 ஆம் கட்டை பகுதியில், 2 மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் மூங்கிலாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
