Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் 17 வயது இளைர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள குவாடேவில்லி (Quadeville) கிராமத்தில், 8 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 17 வயது இளைஞர் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், இந்தத் தாக்குதலுக்கு ஒரு விலங்கு காரணமாக இருக்கலாம் என மாகாண காவல்துறையினர் (OPP) சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஜூன் 24ஆம் திகதி, எட்டு வயது சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜூன் 25ஆம் திகதி அதிகாலை 12:30 மணியளவில், ரென்ஃப்ரூவிற்கு (Renfrew) சுமார் 60 கிலோமீட்டர் தென்மேற்கே அமைந்துள்ள இந்த கிராமத்தின் காட்டுப் பகுதியில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அவர் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது, சிறுமியின் காயங்களுக்கு விலங்குத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

ஆனால், ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள் மீது ஆயுதத்தால் பாலியல் வல்லுறவு செய்தமைக்கான குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இளைஞரின் வயதின் காரணமாக, கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் (Youth Criminal Justice Act) அவரது பெயரை வெளியிட முடியாது.

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடியர்களின் புறக்கணிப்பு வலுவடைந்துள்ளது
அடுத்த செய்தி மனிடோபா மாகாணத்தில் அதிகரித்து வரும் காட்டுத்தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரை உலுக்கிய எப்ஸ்டீன் ரகசியங்கள் – கியூபெக் பிரமுகர்களுக்கு நெருக்கமா?

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்வு ….

ஏப்ரல் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

Trump இன் வரிகள் குறித்து Joly,Carney க்கு மட்டும் விளக்கமளித்தது ஏன்?

மார்ச் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

பிப்ரவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?