ஏர் கனடா நிறுவனம், மொன்ட்ரியலில் இருந்து ஸ்கொட்லாந்தின் Edinburghவுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
கனடாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில், இந்த புதிய சேவை கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
இந்த புதிய விமான சேவை பிரித்தானிய சந்தையுடனான அதன் உறவையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொன்ட்ரியல் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தப்பட்டு, வட அமெரிக்கா முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு Edinburghவுக்கு இலகுவான பயணத்தை வழங்கும் வகையில் இந்த விமான சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொன்ட்ரியலில் உள்ள பிரித்தானிய துணைத் தூதுவர் டேவ் ஜோன்ஸ், இந்த புதிய சேவையை வரவேற்றுள்ளார்.
வரலாறு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற இரண்டு நகரங்களை இந்த சேவை இணைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இணைப்பு சமூகங்களுக்கிடையேயான பிணைப்பை ஆழப்படுத்துவதுடன், புதிய கூட்டுறவுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மொன்ட்ரியலில் இருந்து Edinburghவுக்கான விமான சேவைகள், ஏர் கனடாவின் போயிங் 737 MAX 8 ரக விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
