Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாதுகாப்புக் கூட்டிணைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலும் ஆழமான உறவுகளைக் கனடா ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம், கனடா இனி அமெரிக்காவை இராணுவ உபகரணங்களுக்காக அதிகம் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கையை
அவர் மேற்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தம், கனடிய நிறுவனங்களுக்கு 1.25 டிரில்லியன் யூரோ மதிப்புள்ள 'ரீஆர்ம் ஐரோப்பா' (ReArm Europe) திட்டத்தில், பங்கேற்க வழிவகை செய்துள்ளது.

அத்துடன், SAFE திட்டம் என அறியப்படும் ஒரு திட்டத்தின் கீழ், பிற நட்பு நாடுகளுடன் இணைந்து இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கும்
கனடா அரசாங்கத்திற்கு இது உதவும். இருப்பினும், இந்த அம்சங்கள் நடைமுறைக்கு வர இன்னும் மேலதிக பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் தேவைப்படும். கடந்த பல மாதங்களாகவே, கனடாவின் இராணுவ உபகரணங்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 70% அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட
தளவாடங்களுக்காக செலவிடப்படுவதில் தனது அரசாங்கம் அதிருப்தி கொண்டுள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத பிற நாடுகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் தங்கள் மூலோபாய
ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இந்த புதிய பங்காளித்துவம் நேட்டோ கூட்டணியைப் போல முழுமையானதாக இல்லாவிட்டாலும், டிரம்ப் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை குறித்த அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, ஒட்டாவா -கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் ஸ்டீபன் சைட்மேன்,இது நேட்டோவுக்கு துணையாக அமையலாமே தவிர அதற்கு மாற்றான கூட்டிணைவு அல்ல என்று கூறியுள்ளார்.

முந்தைய செய்தி இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் சமாதானத்துக்கு உடன்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!
அடுத்த செய்தி ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவின் போர் விமானக் கொள்முதல் விவகாரம் – F-35 போர் விமானம் சிறப்பானது

நவம்பர் 27, 2025
Uncategorizedகனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தல் இன்று – 5 தமிழர்கள் போட்டி!

பிப்ரவரி 27, 2025
இலங்கைமுதன்மை செய்தி

பிடியாணையை மீளப் பெற உத்தரவு.

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

Least Flycatcher எனும் பூச்சியுண்ணிப் பறவைகள் குளிர்கால இருப்பிடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஜூலை 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?