திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு செயல்படும் விதத்திற்கும், முதல்வரின் அணுகுமுறைக்கும் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வழிபாட்டுக்குக் கிடைத்த தீர்ப்பு எனக் குறிப்பிட்டார்.
மேலும், இவ்விவகாரத்தில் முதல்வரைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதாகவும், அரசின் நிலைப்பாடுகள் குறித்து முதல்வர் தெளிவான அறிக்கை அல்லது செய்தியாளர் சந்திப்பு வாயிலாக மக்களிடம் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அரசியல் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், திமுக மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதால் அரசியல் கூட்டணி வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அடுத்த தேர்தல் மத ரீதியானதாக இல்லாமல் வளர்ச்சிக்கான தேர்தலாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
