Hydro-Québec நிறுவனம் Dorval பகுதியில் சுமார் 6,000 மின்சாரப் பாவனையாளர்களைப் பாதிக்கக்கூடிய திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையை அறிவித்துள்ளது.
மின்சார விநியோகக் கட்டமைப்பில் முக்கியமான தடுப்பு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் இரவு நேரத்தில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இந்தப் பராமரிப்புப் பணி மின்சார விநியோகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
Dorval பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் இந்த மின்சாரத் தடையால் பாதிக்கப்படுமா என்பதை Hydro-Québec இணையதளத்தில் தங்களது முகவரியைப் பயன்படுத்திச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
