ஒட்டாவாவில் 2026ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
நவம்பர் 24ஆம் திகதி வெளியான தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை ஒட்டாவா வீதிகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, நவம்பர் 10ஆம் திகதி நெபியன் பகுதியில் வாகனம் மோதியதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன், வீதி உயிரிழப்புகள் 33 ஆக உயர்ந்திருந்தன.
அதிக வேகம், வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பயன்படுத்துதல் மற்றும் சாரதிகளின் கவனக்குறைவு ஆகியவை முக்கிய காரணிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
நகரின் ஆபத்தான 50 சந்திப்புகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேயர் மார்க் சட்க்ளிஃப் உறுதியளித்துள்ளார்.
வாகனச் சாரதிகள் வேகத்தைக் குறைத்து, பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
