கனடாவில் வீடுகளின் விலை மற்றும் வாடகைச் செலவு தொடர்பான பிரச்சினை தொடர்ந்து முக்கிய கவலையாக இருப்பதாக கனேடிய மத்திய வங்கி ( Bank of Canada) தெரிவித்துள்ளது.
வங்கியின் மூத்த துணை ஆளுநர் கரோலின் ரோஜர்ஸ்(Senior Deputy Governor Carolyn Rogers )கூறுகையில், வீட்டு வசதியை மக்களுக்கு மீண்டும் எட்டக்கூடிய நிலைக்கு கொண்டு வருவதில் கனடா சரியான பாதையில் சில முன்னேற்றங்களைச் செய்தாலும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்ய வேண்டியுள்ளது.
வீட்டு வசதிப் பிரச்சினைக்கு ஒரே ஒரு எளிய தீர்வு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கனடாவில் புதிய வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், நகரங்களின் திட்டமிடல் மற்றும் infrastructure வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடுகளின் விலை அதிகரிக்கும்போது, அதனுடன் வாடகைச் செலவும் அதிகரிக்கக்கூடும். அதேவேளை, வீட்டு விலை கடுமையாகக் குறைந்தால், வீட்டு உரிமையாளர்களின் சொத்து மதிப்பும் பாதிக்கப்படலாம்.
எனவே, வீட்டு சந்தையில் தேவையை மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு monetary policy போதுமானதாக இருக்காது என்றும் Bank of Canada தெரிவித்துள்ளது.
வீட்டு வசதியை மேம்படுத்துவதற்கு புதிய வீடுகள் கட்டுதல், திட்டமிடல் மற்றும் infrastructure முதலீடு ஆகியவை முக்கியமானவை என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

