கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எதிர்காலத்தில் குடியேற்ற எண்ணிக்கையை மீண்டும் “கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அதிகரிப்பது” குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
New York Times-க்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் கனடாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
கடந்த சில Immigration Levels Plans-லும் கனடாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வருவதும் அரசின் இலக்குகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது குடியேற்ற அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறியுள்ள பிரதமர் Mark Carney, எதிர்காலத்தில் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப குடியேற்றத்தை மீண்டும் அதிகரிப்பது குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கனடாவின் புதிய Immigration Levels Plan விரைவில் வெளியாகவுள்ள நிலையில், குடியேற்ற இலக்குகளில் என்ன மாற்றம் செய்யப்படும் என்பது தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

