கனடா விரைவில் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தமான CUSMA குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் தொடங்க உள்ளது.
கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தமே, CUSMA என்ற சுருக்கப் பெயரில் வழங்கப்படுகின்றது.
அமெரிக்கா தனது சொந்த ஒப்பந்த மறுஆய்வுக்கான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா, இரு நாடுகளுக்குமிடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் “நடக்காது” என, தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்தே, CUSMA ஒப்பந்தம் தொடர்பில் கனேடிய அரசு பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கோரவுள்ளது.
இது தொடர்பில், பொதுமக்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கோரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சரின் அலுவலகம் விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கனடா தொழில்துறை தலைவர்கள், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பூர்வீக குடிமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்படும் என்றும் அமைச்சரின் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
