Alberta மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள referendum தொடர்பான விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இந்த பொது வாக்கெடுப்பில் ( referendum-) மொத்தம் 10 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் Alberta-வின் குடியேற்றக் கொள்கையில் மாகாண அரசுக்கு அதிக அதிகாரம் வழங்குவது தொடர்பான கேள்வியும் இடம்பெற்றுள்ளது.
மேலும், மாகாண அரசின் சில social programs-க்கு தகுதி பெறுவதற்கான immigration status தொடர்பான விதிமுறைகள், அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் referendum கேள்விகளில் இடம்பெற்றுள்ளன.
Alberta-வை கனடாவிலிருந்து பிரிப்பது தொடர்பாக எதிர்காலத்தில் binding referendum நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமா என்பதும் முக்கியமான கேள்விகளில் ஒன்றாக உள்ளது.
இந்த விவகாரம் Alberta-வின் அரசியல் மற்றும் கூட்டாட்சி உறவு தொடர்பான பரந்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

