லிபரல் கட்சியின் அடுத்த தலைவருக்கு மொழி அறிவு அத்தியாவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது பிரதமராக கடமையாற்றி வரும் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகியதால், அவரது பதவி வெற்றிடத்திற்கு தெரிவாகும் நபர் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி அறிவு கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் கட்சி அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர். நாட்டின் அரச கரும மொழிகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகியனவற்றை பேசக்கூடிய ஒருவரை லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு பொருத்தமானவர் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் சீன் ப்ரேசரும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் இருமொழிக் கொள்கையை அத்தியாவசியமானது எனவும் கட்சியின் பல்வேறு உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.