Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், 16 வயது சிறுவன் பலி!

ஏப்ரல் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், காயமடைந்த 16 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு யோர்க் பகுதியில் போக்குவரத்து நிறுத்தத்தின்போதே,
இந்த துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. ஷெப்பர்ட் அவென்யூ மேற்கு மற்றும் பாத்தர்ஸ்ட் வீதிக்கு அருகில் இரவு 11 மணியளவில் போக்குவரத்து மீறலை அவதானித்த காவல்துறையினர் ஒரு காரை நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.

அதன் போது காவல்துறையினர் மீது முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் தாமும் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டனர்.

இதன்போதே 16 வயது சிறுவன் காயமடைந்தார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை ப் பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வீடியோ ஆதாரங்களின்படி அந்த 16 வயது சிறுவனே முதலில் காவல்துறை அதிகாரிகளை நோக்கிச் சுட்டதாகவும் ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூறுகின்றது. அதன் பின்னரே காவல்துறை அதிகாரிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் எனவும்
ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி முடிவுக்கு வந்தது குயின்ஸ் பல்கலைக்கழக வேலை நிறுத்தம்!
அடுத்த செய்தி இலங்கையில் 2000 தை தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ!

ஆகஸ்ட் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய காட்டுத் தீ

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?