குயின்ஸ் பல்கலைக்கழக வேலைநிறுத்தம் தற்காலிக ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய ஆறு வார காலமாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தது. அந்த வேலைநிறுத்தத்தினை முன்னெடுத்து வந்த பட்டதாரி மாணவர் ஊழியர்களின் தொழிற்சங்கமானது, பல்கலைக்கழகத்துடன் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியது. இதனையடுத்து அந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது சேவை கூட்டமைப்பு, தனது உறுப்பினர்களின் ஒப்புதல் வாக்கெடுப்பிற்குப் பின்னர், இந்த
ஒப்பந்தத்தை அறிவித்தது. சிறந்த ஊதியம் மற்றும் ஆதரவு கோரிக்கைகளுக்காக மார்ச் மாதம் 10 ஆம் திகதி அன்று தொடங்கிய இந்த வேலைநிறுத்தம், அந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் கல்வி வேலைநிறுத்தம் என்று கருதப்படுகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊதிய உயர்வு, சந்தை சரிசெய்தல் மற்றும் குழந்தை பராமரிப்பு மற்றும் நோய் விடுப்புக்கான அதிகரித்த நிதி ஆகியவை புதிய ஒப்பந்தத்தில்
அடங்கும் என்று கூறப்படுகிறது. தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, ஆராய்ச்சி உதவியாளர்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகளையும் இது நிவர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.