மொன்றியலின் கிழக்குப் பகுதியான பீனப் பகுதியில் பேருந்து மோதியதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மொன்றியல் காவல் துறையினர் இந்த விபத்து புதன்கிழமை 4:30 மணியளவில் நடைபெற்றதாகவும் விபத்தில் காயமடைந்தவர் 42 வயது மதிக்கத்தக்கவர் எனவும் இவர் பேருந்து நோக்கி சென்று கொண்டிருக்கையில் கீழே விழுந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.