நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். இருப்பினும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை தான். இருப்பினும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. அதோடு கார்போஹைடிரேட் மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் நிறைந்துள்ள சத்தான பருப்பு என்பதால், பாசிப்பயறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த ஊட்டச்சத்து உணவாகும்.
உடல் எடை குறைய உதவும் பாசிப்பயறு
பருப்பில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வு. இதனை தோசை, இட்லி, கூட்டு, பொரொயல் என பல வடிவில் சாப்பிடலாம். சாலட் வடிவிலும் சாப்பிடலாம். முளை கட்டிய பயறு இதை விட சிறந்தது. ஏனெனில் அதன் ஊட்டச்சத்து மதிப்பு (Health Tips) இரட்டிப்பாகிறது.
கரு வளர்ச்சிக்கு உதவும் பாசிப்பயறு
எளிதில் ஜீரணமாகும் பாசிப்பருப்பு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. வேகவைத்த பாசிப்பயிறை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். அதிலும் முளைக்கட்டிய பாசிப்பயறின் ஊட்டச்சத்துகளின் பலன்கள் சொல்லில் அடங்காதவை. அந்த அளவிற்கு அதிகம்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாசிப்பயறு
பாசிபருப்பில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால், உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்தின் அளவை பராமரிக்கிறது. மெக்னீசியம் இரத்த நாளங்களை தளர்த்தி, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் பாசிப்பயறு
கொலஸ்ட்ரால் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பாசிப்பயறு உதவுகிறது. எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் பாசிப்பயறில் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு கிண்ணம் பாசிப்பயறு (சுமார் 130 கிராம்) LDL கொழுப்பின் அளவை சுமார் 5% குறைக்கலாம் என்கின்றன ஆய்வுகள். இது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாசிப்பயறு
நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த பாசிப்பயறு நன்மை பயக்கும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, பருப்பு உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் ஆண்டிமைக்ரோபியல் ஆகும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது.
சருமத்திற்கு நன்மை பயக்கும் பாசிப்பயறு
பாசிப்பயறு சருமத்திற்கு பளபளப்பை தந்து இளமையை காக்க உதவுகிறது. பாசிப்பருப்பை உடலை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தலாம். பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். கூந்தலை பாசிப்பயறு மாவு கொண்டு அலசினால், முடி பளபளக்கும், பொடுகுத் தொல்லையும் நீங்கும்.