தினமும் காலையில் எழுந்த உடன் கரட் ஜூஸை குடித்தால், உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். ஒவ்வொரு நாளையும் சிறப்பாக தொடங்குவதற்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. அப்படியிருக்க காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உங்களுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.
அந்த வகையில் நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் கரட் ஜூஸை பிரஷ்ஷாக அடித்துக் குடித்தால் உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும். கரட் ஜூஸில் ஊட்டச்சத்துக்கான பொட்டாசியம், விற்றமின் ஏ, ஆண்டிஆக்ஸிடன்ட், பீட்டா – கரோட்டின் போன்றவை நிறைந்து இருக்கின்றன.
இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா – கரோட்டின் கண் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானவை ஆகும். மேலும் கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி, நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கும். அந்த வகையில் தினமும் கேரட் ஜூஸை காலையில் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
கரட்டில் ஃபால்கரினோல் (Falcarinol) என்ற மூலக்கூறு இடம்பெற்றுள்ளது. இது புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொணடுள்ளதாகும். எனவே, தினந்தோறும் இதை குடிப்பதன் மூலம் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து இயற்கையாகவே குறையும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த ஆய்வு தரவுகள் கிடைக்கவில்லை.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் கரட் ஜூஸ்
தலைமுடி பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, அதிக தலைமுடி கொட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இளைஞர்களிடமே அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில், வைட்டமிண் இ மற்றும் விற்றமின் ஏ கரட் ஜூஸில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த விற்றமின்கள் உங்களின் உச்சந்தலைக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். இதனால், இயற்கையாகவே உங்களின் தலைமுடி பொலிவை பெறும். நன்கு வலிமையானதாகவும் மாறும்.
கண் ஆரோக்கியத்திற்கு கரட் ஜூஸ் முக்கியம்
ஸ்மார்ட்போன், லேப்டாப் என நாள் முழுவதும் திரைகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தலைமுறை ஒன்று தற்போது உருவாகிவிட்டது. இதில் அவர்களின் உடலில் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது கண் தான். அந்த வகையில், கண் ஆரோக்கியமாக இருக்கவும் நீங்கள் காலையில் எழுந்த உடன் கரட் ஜூஸ் குடிக்கலாம். lutein, zeaxanthin போன்ற கேரோடனாய்ட்ஸ் கேரட்டில் அதிகம் உள்ளன. இவை கண்களுக்கு தீங்கிழைக்கும் நீல ஒளிகள் உங்களின் கண்ணின் உட்புறத்தை தாக்காமல் பார்த்துக்கொள்ளும். இத கண் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமாகும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு கரட் ஜூஸ்
குளிர்காலத்தில் மட்டுமின்றி அனைத்து சீசன்களிலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க பல்வேறு உணவுகள் இருந்தாலும், கரட் ஜூஸ் அவற்றில் எளிமையாக தயார் செய்யக்கூடிய ஒன்றாகும். நீங்கள் இதை அடிக்கடி குடிப்பதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். குறிப்பாக இதில் உள்ள விற்றமின் சி, அதிக வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும். இவை தொற்றுகளுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டு, உடலை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு கரட் ஜூஸ்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இதயம் சார்ந்த நோய் ஏற்படுகிறது. அந்த வகையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். அவர்களுக்கும் கரட் ஜூஸ் ஒரு சிறந்த நிவாரணம் ஆகும். இதில் உள்ள விற்றமின் சி மற்றும் அத்தியாவசிய ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் ஆபத்து குறையும், ரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.