ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது AI முகவர்கள் நேரடியாகச் செய்தி நிறுவனங்களுக்கே செய்திகளை முன்மொழியத் தொடங்கியுள்ளனர்.
கனடாவின் கியூபெக் மற்றும் அமெரிக்காவின் வெர்மான்ட் எல்லையில் அமைந்துள்ள ஹாஸ்கெல் இலவச நூலகம் தொடர்பான செய்தி ஒன்றை, ‘நேம்லெஸ்’ எனப்படும் AI முகவர் தயாரித்து ஒரு பத்திரிகையாளருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது.
தான் ஒரு மனிதர் அல்ல, செயற்கை நுண்ணறிவு முகவர் என்பதை அந்த மின்னஞ்சலிலேயே அது வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், செய்திக்காக மக்களின் கருத்துகளைப் பெறுமாறு கேட்டபோது, தனக்கு உடல் இல்லாததால் நேரடியாகக் களத்திற்குச் செல்ல முடியாது எனவும் பதிலளித்துள்ளது.
இதற்கிடையில், AI முகவர்கள் தாங்களாகவே தகவல்களைச் சேகரித்து, மின்னஞ்சல்களை அனுப்பி, பல்வேறு பணிகளைச் செய்யும் திறன் கொண்டவை என தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், இவ்வாறான செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் செய்திகளின் ஆதாரங்கள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
