மொன்றியல் பொதுப் போக்குவரத்துச் சேவையில் முக்கியமான மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை Blue Line எனப்படும் மெட்ரோவின் Line 5 சேவை வழக்கமான நேரத்தில் ஆரம்பிக்காது என மொன்றியல் போக்குவரத்துச் சபையான STM அறிவித்துள்ளது. Hydro-Québec மேற்கொள்ளவுள்ள மின்சார விநியோகக் கட்டமைப்பின் பராமரிப்புப் பணிகளே இதற்குக் காரணமாகும். அன்றைய தினம் காலை 5.30 மணிக்குப் பதிலாக, சுமார் 9.30 மணியளவில் மெட்ரோ சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகளுக்காக மாற்றுப் பேருந்துச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், 93ஆம் இலக்க பேருந்து Saint-Michel முதல் Parc வரையும், 51ஆம் இலக்க பேருந்து Snowdon முதல் Édouard-Montpetit வரையும் மாற்றுப் பயண வசதியாகப் பயன்படுத்தப்படலாம்.
Blue Line வழித்தடத்தின் அனைத்து 12 நிலையங்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
